புத்தகம் ஏந்த வேண்டிய கையில் துடைப்பம்! பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்யும் மாணவர்கள்

அரசு பள்ளி கழிவறையை மாணவ, மாணவிகள் தூய்மை செய்யும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்களை வைத்து வேலைகளை வாங்கும் மனோபாவம் என்பது இன்னும் சில பள்ளிகளில் ஆசிரியர்கள்…

அரசு பள்ளி கழிவறையை மாணவ, மாணவிகள் தூய்மை செய்யும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாணவர்களை வைத்து வேலைகளை வாங்கும் மனோபாவம் என்பது இன்னும் சில பள்ளிகளில் ஆசிரியர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது. எத்தனை அறிவுறுத்தல்கள் இருந்தாலும் மாணவர்களை வேலை வாங்கும் சம்பவங்கள் மட்டும் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு பள்ளியில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

அப்படியான ஒரு சம்பவம் தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி முத்து மாரியம்மன் நகரில் வங்கி வரும் அரசு பள்ளி ஒன்றில் நிகழ்ந்துள்ளது. பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்த அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 180 மாணவ மாணவிகள் படித்து வருகினறனர். தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 12 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

நெசவாளர்கள் நிறைந்த மிகவும் பின்தங்கிய பகுதி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக இப்பகுதியில் தொடங்கப்பட்ட இந்த பள்ளியானது, ஆரம்பிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் தற்போது வரை மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தை பெற்று கல்வித்தரத்தில் பெரிய அளவில் இடம்பெறவில்லை .

இந்நிலையில் இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை வைத்து பள்ளி கழிவறைகளை ஆசிரியர்கள் சுத்தம் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அதனை உறுதி செய்யும் வகையில் மூன்று மாணவர்கள் கழிவறைகளை தாங்களே சுத்தம் செய்யும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.