மதுரை அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டியில் நண்பகல் நிலவரப்படி 11 பேர்
படுகாயத்துடன் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை : அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை துவங்கி வெகுவிமர்சையாக
நடைபெற்று வருகிறது. வாடிவாசல் வழியாக சீறிவரும் காளைகளை தீரத்துடன் மாடுபிடி வீரர்கள் அடக்கி வெற்றி பெற்று வருகின்றனர். காளைகளும் மாடுபிடி வீரர்களுக்கு சிக்காமல் நழுவி விளையாடி வருகின்றனர்.
காலை 8 மணிக்கு ஜல்லிகட்டு துவங்கியதில் இருந்து நண்பகல் 12.30 மணி வரை மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் உட்பட 11 பேர் படுகாயமடைந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டனர்.
இதில் 12 மாடுகளை பிடித்த மாடுபிடி வீரர் விளாங்குடியை சேர்ந்த பாலாஜி,
மற்றொரு மாடுபிடி வீரரான கபிலன் மற்றும் காளை உரிமையாளரான சென்னை மாநாகர ஆயுதப்படையில் காவலராக பணியாற்றும் திருப்புவனத்தை சேர்ந்த ராஜ்கமல் மற்றும் பார்வையாளர்கள் உட்பட 11 பேர் நண்பகல் 12.30 மணி வரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.







