அம்பத்தூர் அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூர் அடுத்த மங்களபுரத்தை சேர்ந்தவர் விடியல் (30). அதே பகுதியில்
ஆட்டோ ஓட்டி வந்தார். இவர் கடந்த ஆண்டு சதிஷ் என்பவர் கொலை வழக்கில்
சிறை சென்று வந்தார். இந்நிலையில் இரவு தனது ஆட்டோவில் வீடு அருகே வந்து
கொண்டிருந்தார்,
விடியலை வழிமறித்து அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் விடியலை அவர்கள் வெட்டியதாக கூறப்படுகிறது. தலையில் பலத்த காயம் விடியல், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து அங்கு விரைந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை வடி காவல் ஆணையராக இணை ஆணையர் விஜயகுமார், செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையர் பாலகிருஷ்ணன், உதவி ஆணையர் கிரி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.







