Aus vs Ind: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா; விக்கெட்டுகளுக்கான தேடலில் இந்தியா – முதல் நாள் நிலவரம்!

பார்டர் கவாஸ்கர் கோப்பை 4-வது டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் ஆஸ்திரேலியா; விக்கெட்டுகளுக்கான தேடலில் இந்தியா – முதல் நாள் நிலவரம். பார்டர் கவாஸ்கர் கோப்பை 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி…

பார்டர் கவாஸ்கர் கோப்பை 4-வது டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் ஆஸ்திரேலியா; விக்கெட்டுகளுக்கான தேடலில் இந்தியா – முதல் நாள் நிலவரம்.

பார்டர் கவாஸ்கர் கோப்பை 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று துவங்கியது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி ஆல்பனேஸ் ஆகியோர் ஒரு அணிகளின் கேப்டன்களுக்கு டெஸ்ட் கேப் வழங்கி போட்டியைத் தொடங்கி வைத்தனர்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. நிதானமான ஆட்டத்தைத் தொடங்கிய ஆஸ்திரேலிய முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழந்து 255 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா சதம் விளாசியதுடன், 104 ரன்களுடன் களத்திலும், கேமரூன் கிரீன் 49 ரன்களுடன் களத்திலும் உள்ளனர்.

இந்தியா சார்பில் முகமது சமி 2 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். வலுவான தொடக்கத்தைக் கொடுத்துள்ள ஆஸ்திரேலிய அணி நாளை இரண்டாவது நாள் ஆட்டத்தைத் தொடங்க உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.