நீதிபதியை கத்தியால் குத்த முயற்சி: சேலத்தில் பரபரப்பு

நீதிபதியை கத்தியால் குத்த முயன்ற அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவர் கைது செய்யப்படுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், அலுவலக பணிகள் வழக்கம்போல இன்று நடந்துகொண்டிருந்தது. அப்போது, அலுவலக உதவியாளராக பணிபுரிந்து…

நீதிபதியை கத்தியால் குத்த முயன்ற அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவர் கைது செய்யப்படுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், அலுவலக பணிகள் வழக்கம்போல இன்று நடந்துகொண்டிருந்தது. அப்போது, அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வரும் பிரகாஷ் என்பவர் இன்று காலை நீதிமன்ற வளாகத்தில், ஜே-4 நீதிமன்ற நீதிபதி பொன்.பாண்டியனை கத்தியால் குத்த முயன்றார், இந்தச் சம்பவத்தால் அங்கு தொடர்ந்து பரபரப்பு நிலவியது.

அதனைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர் உடனடியாக பிரகாஷ் என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக அஸ்தம்பட்டி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில், ஓமலூர் நீதிமன்றத்தில் இருந்து சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு இன்று இடமாற்றம் செய்யப்பட்ட அலுவலக உதவியாளர் பிரகாஷ் இந்த கத்தியால் குத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

நீதிபதிக்கும் உதவியாளருக்கும் ஏற்பட்ட கருத்து மோதலின் காரணமாக இந்த சம்பவம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. உதவியாளர் பிரகாஷ் தாக்கியதில், நீதிபதி பொன்.பாண்டியனுக்கு பெரிய காயம் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட தலைமை நீதிபதி மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாணை மேற்கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.