அமெரிக்க நாடாளுமன்றம் மீது தாக்குதல் – கமலா ஹாரிஸ் கண்டனம்

அமெரிக்க நாடாளுமன்றம் தாக்கப்பட்டதில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார் மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிட்டல் கட்டிடத்தின் மீது அடையாளம் தெரியாத நபர் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரி வில்லியம்…

அமெரிக்க நாடாளுமன்றம் தாக்கப்பட்டதில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார் மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிட்டல் கட்டிடத்தின் மீது அடையாளம் தெரியாத நபர் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரி வில்லியம் இவான்ஸ் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாகுதலில் ஈடுப்பட்டவர் மீது அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிசூடு நடத்தியதில் படுகாயமடைந்த அந்த நபர் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் உயிரழந்தார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. இந்நிலையில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸும் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டிடத்தை காப்பாற்றுவதற்கு தன் உயிரை மாய்த்துக்கொண்ட காவல்துறை அதிகாரி வில்லியம் இவான்ஸின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் சிறப்பாக செயல்பட்ட கேபிட்டல் நகர காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.