பிரேம்ஜி மீது சிவகார்த்திகேயனுக்கு என்ன கோபமோ?

நடிகர் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் வெளியாவதில் பல்வேறு பிரச்சனைகள் நிலவி வந்த சூழலில் தற்போது திரையரங்களில் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று மாலை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படம் வெளியாவதில் தாமதம், தேதி பின்னர்…

நடிகர் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் வெளியாவதில் பல்வேறு பிரச்சனைகள் நிலவி வந்த சூழலில் தற்போது திரையரங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று மாலை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படம் வெளியாவதில் தாமதம், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு திட்டமிட்டபடி படம் வெளியாகும் என அறிவிப்பை அறிவித்தார் இயக்குநர் வெங்கட் பிரபு.

பல்வேறு தரப்பினர் ட்விட்டரில் சிம்பு மற்றும் மாநாடு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் ட்வீட் ஒன்று செய்திருந்தார் அதில், நடிகர் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா மற்றும் கல்யாணி, யுவன்சங்கர் ராஜா, வெங்கட் பிரபு, சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட பெயர்களை குறிப்பிட்டு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். இதில் நடிகர் பிரேம் ஜி பெயர் மிஸ்ஸிங்.

சிவகார்த்திகேயன் ட்வீட்டில் சென்று நடிகர் பிரேம்ஜி Sir me ? என்னை மறந்து விட்டீர்கள் என்பது போல ஜாலியாக கமெண்ட் செய்துள்ளார்.

2013ல் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா சென்னையில் நடைபெற்ற போது நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபுவை மேடைக்கு அழைப்பதற்கு ‘இவர் யாருனா? இவரு கதை இல்லாம கூட படம் எடுத்திருவாரு ஆனா அவரு தம்பி இல்லாம படம் எடுக்க மாட்டாரு’என கூறிய அவரே தற்போது மாநாடு படத்தில் நடித்த பிரேம்ஜியை மறந்து போனது ஏன் என ரசிகர்கள் ஜாலியாக  சிலாய்த்து வருகின்றனர்.

– மா.நிருபன் சக்கரவர்த்தி 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.