காசா மருத்துவமனை மீது தாக்குதல் – 5 பத்திரிகையாளர்கள் உள்பட 21 பேர் உயிரிழப்பு!

காசா பகுதி முழுவதும் நேற்று காலை முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 61 பேர் பலியாகி உள்ளனர்.

காசா பகுதியில் தொடர்ந்து போர் சூழல் நிலவி வரும் நிலையில், தெற்கு காசாவில் உள்ள நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பத்திரிகையாளர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் மீட்பு பணியாளர்களும் அடங்குவர். இத்தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இதில் 5 பேர் பத்திரிகையாளர்கள் என்று காசா சுகாதார துறை உறுதி செய்துள்ளது. காசா மருத்துவமனையில் நடந்த இந்த தாக்குதலுக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகத்தில் இருந்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், “தவறுதலாக நடந்த ஒரு “துயரமான விபத்து” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வருத்தம் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை மீதான தாக்குதலை உறுதிப்படுத்திய இஸ்ரேல் ராணுவம் இதுகுறித்து உள் விசாரணை நடத்தப்படும் என்றும் பத்திரிகையாளர்களை காயப்படுத்துவது தங்கள் நோக்கம் அல்ல என இஸ்ரேல் ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.