தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு நகரில் தனது பக்கத்து வீட்டு நாயை ‘நாய்’ என்று அழைத்த 65 வயது விவசாயி ஒருவர் கொல்லப்பட்டார்.
தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு என்ற ஊரில் 65 வயது விவசாயி ஒருவர் தனது பக்கத்து வீட்டு நாயை ‘நாய்’ என்று அழைத்ததால் ஏற்பட்ட சண்டையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
65 வயது விவசாயியான ராயப்பனுக்கும் அவரின் பக்கத்து வீட்டு நாய்களுக்கும் பிரச்னை இருந்தது வந்துள்ளது. டேனியல் மற்றும் வின்சென்ட் ஆகியோரின் பக்கத்து வீட்டு நாய்கள் அவ்வழியாகச் செல்பவர்களை ஆக்ரோஷமாக பாய்வதும் குலைப்பதுமாக இருந்து வந்துள்ளது. இதனால் பலமுறை ராயப்பன் அவர்களிடம் புகார் அளித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ராயப்பன் பக்கத்து வீட்டு நாய்களை பெயர் சொல்லி அழைக்க மறுத்ததால் வாக்குவாதம் முற்றியது. இந்த வாக்குவாதத்தில், நாய்களைத் தாக்க ராயப்பன் குச்சியை தேடியதால், நிலைமை கைமீறியது.
இதனால் ஆத்திரமடைந்த வின்சென்ட் மற்றும் டேனியல் அவரை தாக்கினர். இதையடுத்து ராயப்பன் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய டேனியல் மற்றும் வின்சென்ட் ஆகியோரை தேடி லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர்.