வைரலாகும் அதர்வாவின் ‘ட்ரிகர்’ படத்தின் ட்ரெய்லர் அப்டேட்!

குழந்தை கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அதர்வாவுடன் தான்யா ரவிச்சந்திரன் மற்றும் அருண்பாண்டியன் உட்படப் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். அதர்வா, 8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷுடன் இனைந்து 2019-ம்…

குழந்தை கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அதர்வாவுடன் தான்யா ரவிச்சந்திரன் மற்றும் அருண்பாண்டியன் உட்படப் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

அதர்வா, 8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷுடன் இனைந்து 2019-ம் ஆண்டு குருதி ஆட்டம் திரைப்படத்தினை தொடங்கினார். ஆனால் சில பல காரணங்களால் இப்படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின் பல தடைகளைத் தாண்டி குருதி ஆட்டம் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியானது. இப்படமும் அவருக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இந்நிலையில் தற்போது குருதியாட்டம் திரைப்படம் கடந்த வாரம் ஆஹா OTT தளத்தில் வெளியாகி பலரிடம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

தற்போது நடிகர் அதர்வா ‘ட்ரிகர்’ (Trigger) படத்தில் நடித்துள்ளார். டார்லிங், 100, கூர்கா போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சாம் ஆண்டன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ள இப்படத்தை மிராக்கிள் மூவிஸ் மற்றும் பிரமோத் பிலிம்ஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளன.இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இந்த படத்திற்கு வசனங்களை எழுதி உள்ளார். மேலும் எடிட்டர் ரூபன் இப்படத்திற்குப் படத்தொகுப்பு செய்துள்ளார்.

குழந்தை கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அதர்வாவுடன் தான்யா ரவிச்சந்திரன் மற்றும் அருண்பாண்டியன் உட்படப் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். வரும் இம்மாதம் 23ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இப்படத்திலிருந்து அதிரடி ஆகஷன் காட்சிகள் நிறைந்த ட்ரெய்லர் ஒன்றைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த சூழலில் இப்படத்திற்குத் தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.