முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் தொடங்கியது

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் வடபழனி மியூசிக் ஹாலில் இன்று காலை தொடங்கியது. 

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். தலைவர், பொதுச்செயலாளர், துணைத்தலைவர், பொருளாளர் உள்ளிட்ட 21 பதவிகளுக்காக இந்த தேர்தல் நடத்தப்படுகிறது. 2 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தேர்தல் செப்டம்பர் 11ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. வடபழனி மியூசிக் யூனியனில் காலை 8 மணிக்கு தொடங்கிய தேர்தல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

இதில், பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும், எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில் ஒரு அணியும் வசந்தம் என்ற மற்றொரு அணியும் போட்டியிடுகின்றனர். உயர் நீதிமன்ற வழக்கறிஞர் செந்தில்நாதன் தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்படுகிறார். இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மொத்தம் 570 பேர் எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராக உள்ளனர். அதில் 485 பேர் வாக்களிக்க தகுதி உடையவர்கள். இன்று (செப் 11) இரவுக்குள் வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர்கள் நிலவரம் அறிவிக்கப்படும். தலைவர், பொதுச் செயலாளர், துணைத் தலைவர், பொருளாளர் உள்ளிட்ட 21 பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பேனர் கிழிந்ததால் மண்டப உரிமையாளரை சரமாரியாக தாக்கிய இளைஞர்கள்

G SaravanaKumar

திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் நிறுத்திவைப்பு: சென்னை மாநகராட்சி ஆணையர்!

Jayapriya

புதுமையான உத்தியை கையில் எடுத்துள்ள லோகேஷ் கனகராஜ்

EZHILARASAN D