திருவண்ணாமலை கோயிலில் காணிக்கை எண்ணிக்கை: உண்டியலில் ரூ.2 கோடி பணம், 195 கிராம் தங்கம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பங்குனி மாத உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 7 லட்சத்து 6 ஆயிரத்து 201 ரூபாய் பணமும், 195 கிராம் தங்கமும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பங்குனி மாத உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 7 லட்சத்து 6 ஆயிரத்து 201 ரூபாய் பணமும், 195 கிராம் தங்கமும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள 14 கிலோ மீட்டர் மலையைச் சுற்றி ஆண்டுதோறும் ஒவ்வொரு மாதமும் கிரிவலம் வருவது வழக்கம் அதுபோல் கடந்த பங்குனி மாதம் தமிழ் தேதி 22-ம் நாள் பௌர்ணமி தினத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தரகள் கிரிவலம் வந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இன்று கிரிவலப் பாதை மற்றும் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உள்ள உண்டியல்கள் கோவிலின் மூன்றாம் பிரகாரத்திலுள்ள திருக்கல்யாண மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் மேற்பார்வையில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் சிவனடியார்களால் உண்டியல் எண்ணப்பட்டது.

இதில் காணிக்கையாக 2 கோடியே 7லட்சத்து 6 ஆயிரத்து 201 ரூபாய் பணமும் மேலும் 195 கிராம் தங்கமும், 1,205 கிராம் வெள்ளியும் பக்தர்களால் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

—-அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.