முக்கியச் செய்திகள் தமிழகம்

கிணற்றில் தவறிவிழுந்த முதியவர் 2 நாட்களுக்குப் பிறகு மீட்பு

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறிவிழுந்த முதியவர் இரண்டு நாட்களுக்குப் பிறகு உயிருடன் தீயணைப்புத் துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவர் அப்பகுதியில் ஆடு மேய்த்து கொண்டு இருக்கும்போது, அருகில் இருந்த 60 ஆழ கிணற்றில் தவறி விழுந்துள்ளார.

அதைத் தொடர்ந்து அவரை காணவில்லை என இரண்டு நாட்களாக உறவினர்கள் தேடிப்பார்த்தபோது. அவர் கிணற்றில் தவறி விழுந்தது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து உறவினர்கள் சங்கரன்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயாணைப்பு துறையினர் உடனடியாக விரைந்து செயல்பட்டு முதியவரை உயிருடன் மீட்டனர். இரவும் பகலும் இரண்டு நாட்களாக தண்ணீரில் தத்தளித்து வந்த முதியவரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

Advertisement:

Related posts

யார் இந்த எல்.முருகன்?

Vandhana

மத்திய முன்னாள் அமைச்சர் அஜித் சிங் காலமானார்

Halley karthi

பாசன கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசுக்கு நோட்டீஸ்: சென்னை உயர்நீதிமன்றம்!

Halley karthi