விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு அறிவிப்பு ………!

இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனைகளுள் ஒருவர் சுனிதா வில்லியம்ஸ். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சுனிதாவின் தந்தை தீபக் பாண்டியா, 1957 ம் ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கு உர்சுலின் போன்னியை மணந்து கொண்டார். இந்த தம்பதிக்கு 1965 ம் ஆண்டில் சுனிதா வில்லியம்ஸ் பிறந்தார்.

ஃப்ளோரிடாவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியியல் மேலாண்மைப் படிப்பை முடித்த சுனிதா வில்லியம்ஸ், 1998ம் ஆண்டில் நாசாவில் வேலைக்கு சேர்ந்தார். 2006 ஆம் ஆண்டு முதல்முறையாக  விண்வெளி பயணம் மேற்கொண்ட அவர், தனது பதவிக் காலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்காக (ISS) மூன்று வெற்றிகரமான பயணங்களை முடித்துள்ளார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாசாவின் சார்பில் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுனிதா வில்லியம்ஸ் அனுப்பப்பட்டனர்.

புட்ச் வில்மோரும் (62) உள்ளிட்ட குழுவினருடன் விண்வெளியில் சுமார் 286 நாட்களை (9 மாதங்கள்) செலவிட்டு கடந்த ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி பூகிக்கு திரும்பினார்.

இந்நிலையில், நாசாவில் 27 ஆண்டுகள் பணிபுரிந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தற்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.