கீழடி என்றாலே சிலருக்கு பயம் : அமர்நாத் ராமகிருஷ்ணன் பேச்சு..!

கீழடி என்றால் சிலருக்கு ஏன் பயம் வருகிறது என தெரியவில்லை என்று மத்திய தொல்லியல் துறை ஆய்வாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன் பேசியுள்ளார்.

மதுரையில் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா (1925-2025) நினைவாக, இந்தியாவின் வரலாற்றை சிதைவுகளிலிருந்து மீட்பது குறித்த மாநில அளவிலான ஒரு நாள் மாநாடு நடைபெறுகிறது. இந்நிகழ்வில் மத்திய தொல்லியல் துறை ஆய்வாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன் பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியவதாவது ;

கீழடி என்றால் சிலருக்கு ஏன் பயம் வருகிறது என தெரியவில்லை. நான் கீழடியில் செய்த ஆய்வுகளின் முடிவுகளை வைத்து பல ஆய்வுகளை மேற்கொள்ளலாம். 1834ல் வெளிவந்த பிராமி எழுத்துக்களை நாம் படிக்கவில்லை. வரலாற்றை நாம் அறிவியல் கண்ணோட்டத்துன் பார்க்க வேண்டும்.

தமிழ் நாட்டில் நடைபெற்ற அகழாய்வுகளில் சுமார் 1,672 பானை ஓடுகள் எழுத்துக்கள் கிடைக்கப் பெற்று உள்ளது. இந்த ஆய்வுகளை வைத்து பார்த்தால் பிராமி எழுத்துகள் தமிழகத்தில் இருந்து தான் தோன்றி இருக்க வேண்டும். கீழடி அகழாய்வு போல தமிழகத்தில் நடைபெறும் அகழாய்வுகள் குறித்து மக்களுக்கு விளக்கி சொல்ல வேண்டும்.

எங்களின் ஆய்வின் படி கி.மு 800 ல் சங்ககாலம் தொடங்கி இருக்க வேண்டும். கீழடியில் 5 சதவீதம் மட்டுமே அகழாய்வுகள் நடைபெற்று உள்ளது. 5 சதவீத அகழாய்வுக்கே உலகெங்கும் கீழடி குறித்து பேசப்படுகிறது. சங்க இலங்கியத்துடன் கீழடியை எப்படி ஒப்பீடு செய்யப்படுகிறது என கேட்கும் கேள்விக்கு நான் என்ன பதில் சொல்வது என தெரியவில்லை. சங்க இலக்கியத்தில் அத்தனை ஆதாரங்கள்களும் உள்ளது.

கீழடி அகழாய்வு தமிழர்களின் வரலாற்றின் கேட்பாட்டை மாற்றும். பல தடைகளை தாண்டி கீழடி அகழாய்வு தகவல்கள் பரவி வருகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.