2 நாள் விடுமுறைக்குப் பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது

இரண்டு நாள் விடுமுறைக்கு பின்னர் சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 13 ஆம் தேதி பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தற்போது மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்…

இரண்டு நாள் விடுமுறைக்கு பின்னர் சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 13 ஆம் தேதி பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தற்போது மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் சட்டப்பேரவை மீண்டும் இன்று கூடுகிறது. இன்று, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தொழில்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

இந்த துறைகளின் கீழ் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மு.பெ.சாமிநாதன் ஆகியோர் புதிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளது. மேலும், 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.