முக்கியச் செய்திகள் கொரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 1,523 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக 1,523 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 368 பேருக்கு கொரோனா பரிசோதனை
மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,523 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனாவால் 26 லட்சத்து 13 ஆயிரத்து 360 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்றில் இருந்து ஒரே நாளில் ஆயிரத்து 739 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25
லட்சத்து 61 ஆயிரத்து 376 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில்,
பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை
உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 899 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 183 பேருக்கு புதிதாகத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 227 பேர், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Ezhilarasan

தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – காவல் ஆணையர் எச்சரிக்கை!

Gayathri Venkatesan

இந்தியா ஒருபோதும் சதிசெயல்களை அனுமதிக்காது: பிரதமர் நரேந்திர மோடி!

Jayapriya