ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள்: தலைமை தேர்தல் அதிகாரி!

ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படைகள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படும், என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு வீடியோ…

ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படைகள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படும், என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு வீடியோ எடுக்கும் குழுவும், வீடியோ கண்காணிப்பாளரும் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் பணிக்காக 330 துணை ராணுவப்படை கம்பெனி கேட்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை 45 கம்பெனி வந்துள்ளது என தெரிவித்தார்.

மேலும், பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த 61 ஆயிரம் பேனர்கள், போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும், 10 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். மேலும், தனியார் இடங்களில் வைக்கப்பட்டிருந்த 21 ஆயிரம் போஸ்டர்களும் அகற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.இதனிடையே சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் தேர்தல் செலவின கண்காணிப்பு அதிகாரிகளோடு ஆலோசனையில் ஈடுபட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.