திமுக-காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை இணக்கமான முறையில் நடைபெற்றதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ்- திமுக இடையே முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்தது. அதில், முடிவு எட்டப்படாத நிலையில், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, இணக்கமான முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறினார். தொகுதி பங்கீடு குறித்து தாங்களே முடிவெடுப்போம் என்றும் மேலிட பொறுப்பாளர்கள் வரப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முன்னதாக, மதிமுக தலைமை அலுலவகத்துக்குச் சென்ற திமுக நிர்வாகிகள், அக்கட்சியின் பொதுசெயலாளர் வைகோவுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். சட்டப்பேரவைத் தேர்தலில் தனி சின்னத்தில் தான் போட்டியிடும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.