குட்டிக்கரணம் அடித்து வந்து பட்டம் பெற்ற மாணவி!

இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்த சீன மாணவி சென்யினிங் பட்டமளிப்பு விழாவில் நடந்து கொண்ட விதம் உலக அளவில் வைரலாகி வருகிறது. பல்கலைக்கழக பட்டம் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மறக்க முடியாதது. 80-ஸ்…

இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்த சீன மாணவி சென்யினிங் பட்டமளிப்பு விழாவில் நடந்து கொண்ட விதம் உலக அளவில் வைரலாகி வருகிறது.

பல்கலைக்கழக பட்டம் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மறக்க முடியாதது. 80-ஸ் கிட்களின் வீடுகளுக்குச் சென்றால், தலையில் கறுப்பு குல்லா வைத்து கையில் சுருட்டிய சான்றிதழுடன் காட்சி அளிக்கும் புகைப்படங்களை இன்றும் பார்க்கலாம். இது குறித்து கேட்டால், கல்லூரி வாழ்க்கை குறித்தும், பட்டம் பெற்றதும் குறித்து அவர்கள் பேசத் தொடங்கி விடுவார்கள்.

இந்தநிலையில், இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்த சீன மாணவி சென் யினிங் பட்டமளிப்பு விழாவில் நடந்து கொண்ட விதம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

விழா மேடையில் பட்டம் வாங்க மாணவிகள் பலரும் வரிசையில் நின்றனர். சீன மாணவி சென் யினிங் பட்டம் வாங்க சென்ற போது அவர் திடீரென விழா மேடையில் குட்டிக்கரணம் அடித்தார். பட்டம் வழங்க இருந்த கல்வியாளர்கள் இதனை கண்டு ஆச்சரியமடைந்தனர்.

அதோடு அவர்கள் சீன மாணவி சென் யினிங்குக்கு சிரித்தபடி பட்டத்தை வழங்கினர். இந்த காட்சிகளை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றவர்கள் செல்போனில் பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.