#Assam சுரங்க விபத்து | மேலும் 3 தொழிலாளர்களின் உடல்கள் மீட்பு!

அசாம் சுரங்க விபத்தில் மேலும் மூன்று தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அசாமின் மலைப்பிரதேச மாவட்டங்களில் ஒன்றான திமா ஹசாவோவில் உள்ளடங்கிய பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த ஜன.6ம்…

Assam Mining Accident | The bodies of 3 more workers were recovered!

அசாம் சுரங்க விபத்தில் மேலும் மூன்று தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அசாமின் மலைப்பிரதேச மாவட்டங்களில் ஒன்றான திமா ஹசாவோவில் உள்ளடங்கிய பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த ஜன.6ம் தேதி இந்த சுரங்கத்திற்குள் மழை வெள்ள நீர் புகுந்தது. அப்போது சுரங்கத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த தொழிலாளர்களில் சிலர் தப்பி வெளியே வந்த நிலையில் 9 பேர் அதில் சிக்கிக்கொண்டனர்.

இதையும் படியுங்கள் : #RainAlert | மக்களே உஷார்… 5 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை!

தப்பி வெளியே வந்தவர்கள் சுரங்க உரிமையாளர் மற்றும் போலீசாரிடம் சுரங்க விபத்து குறித்து தெரிவித்தனர். தொடர்ந்து, உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையின்ர தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

கடந்த 8ம் தேதி சுரங்கத்தில் இருந்து தொழிலாளி ஒருவரின் உடல் மீட்கப்பட்ட நிலையில், இன்று மேலும் மூவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம், சுரங்க விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் சுரங்கத்தில் 5 பேர் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுரங்கத்தில் சிக்கிய 3 தொழிலாளர்களின் உடல் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.