ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கப் போவதாகக் கூறியுள்ள சிவகார்த்திகேயன், #AskSK #AskPrince என்ற ஹாஷ்டாக்களை பகிர்ந்துள்ளார்.
தமிழின் முன்னணி நடிகர்களுள் ஒருவான சிவகார்த்திகேயன் டான் திரைப்படத்தைத் தொடர்ந்து பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தைத் தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கியுள்ளார். தமிழக இளைஞனுக்கும் வெளிநாட்டுப் பெண்ணுக்கும் இடையே மலரும் காதல் குறித்து நகைச்சுவையாகப் படமாக்கியுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த படத்தில் படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் இடம் நடித்துள்ளனர். பீஸ்ட் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரமஹம்சா மற்றும் மாநாடு படத்தை எடிட்டிங் செய்த பிரவீன் ஆகியோர் பிரின்ஸ் படத்தில் இணைந்திருக்கிறார்கள். மேலும் இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இப்படத்திலிருந்து பாடல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. 21ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் புரமோஷன் நிகழ்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சிவகார்த்திகேயன் டிவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஆசிரியத்தை அளித்துள்ளார்.
அந்த வீடியோவில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கப் போவதாகக் கூறியுள்ள சிவகார்த்திகேயன், #AskSK #AskPrince என்ற ஹாஷ்டாக்களை பகிர்ந்துள்ளார். இதனால் இந்த ஹாஷ்டாக்களை பயன்படுத்தி அவரது ரசிகர்கள் அவரிடம் பல கேள்விகளைக் கேட்டு வருகின்றனர்.