“விஜயிடம் கேளுங்கள்” – தவெக கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் பதில்!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம், தவெக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கூட்டணி குறித்து விஜயிடம் கேளுங்கள் என்று பதிலளித்துள்ளார். தச்சூரில் தேமுதிக பிரமுகர் கண்ணதாசன் இல்ல திருமண விழாவில் தேமுதிக பொதுச்…

“Ask Vijay” - Premalatha Vijayakanth's response on the Thaweka alliance!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம், தவெக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கூட்டணி குறித்து விஜயிடம் கேளுங்கள் என்று பதிலளித்துள்ளார்.

தச்சூரில் தேமுதிக பிரமுகர் கண்ணதாசன் இல்ல திருமண விழாவில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் தவெக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அதிமுகவுடன் தவெக கூட்டணி குறித்து விஜயிடம் கேளுங்கள் என்றும், அதிமுக தலைமையில் நல்லதொரு கூட்டணி அமையும், உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கட்டும் என்றும், எங்கு தேமுதிக போட்டியிடும் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

தொடர்ந்து, தமிழ்நாட்டிற்கு தமிழ் தான் முக்கியம் எனவும், இங்கு யாரும் எந்த மொழியையும் திணிக்க முடியாது எனவும், ஒருவர் விரும்பினால் மட்டுமே அந்த மொழியை கற்க முடியும் யாரும் திணிக்க முடியாது எனவும் தெரிவித்தார். தொடர்ந்து நடிகை கஸ்தூரி குறித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், ‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்பது போல் பேசத் தெரியாமல் பேசி நடிகை கஸ்தூரி மிகப்பெரிய சிக்கலில் மாட்டி கொண்டுள்ளார் என தெரிவித்தார்.

மேலும், “பெண்களை தவறாக பேசியது கண்டிக்கத்தக்கது, ஆனால் எத்தனையோ தலைவர்கள் என்னென்னவோ பேசி இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் கைது செய்யவில்லை. ஆனால் தீவிரவாதியை போன்று ஹைதராபாத்திற்கு சென்று போலீசார் கஸ்தூரியை கைது செய்துள்ளனர். இது வேதனைக்குரியது. ஒரு பெண்ணான அவருக்கு இது போன்று நடந்துள்ளது அநியாயம்“ இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.