ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய அணி 211 ரன்கள் குவிப்பு!

இந்திய அணி முதல் இன்னிங்சில் 20 ஓவர் முடிவில், 211 ரன்களை குவித்துள்ளது.

ஆசிய விளையாட்டு ஆடவர் டி20 கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது. இந்த நிலையில் இன்று நிஷின் நகரில் உள்ள கரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் ஸ்டேடியத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்துது.

முதலில் களமிறங்கிய இந்திய அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி 15 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் அதிரடியாக விளையாடிய அபிஷேக் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். இதைத்தொடர்ந்து ஷிவம் துபே மற்றும் திலக் வர்மா அதிக ரன்களை குவித்தனர். இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் அகமது மினஸ் மற்றும் அகமது டானியல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பாகிஸ்தான் பவுலர்களான சயீம் அபூப் மற்றும் அப்ரர் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.