ஆசிய விளையாட்டு போட்டி : இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் ஆண்கள் பிரிவில் இன்று நடைபெற்ற அரைஇறுதியில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி இலங்கையை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சஹான் அரச்சிகே பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 80 ரன்கள் குவித்தார்.

தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியமால் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இலங்கை அணியில் 5 வீரர்கள் டக் அவுட் ஆகினர். இறுதியில் இலங்கை அணி 9.5 ஓவர்களில் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தப் போட்டியில் 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதவிருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.