உத்தரபிரதேசத்தில் டிராக்டர் ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உத்தரபிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் பெக்ராஜ்பூர் கிராமத்தில் வசித்து வரும் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை அருகேயுள்ள சந்தைக்கு சென்று விற்று விட்டு டிராக்டர் ஒன்றில் திரும்பி கொண்டிருந்தனர். அவர்கள் வந்த வாகனம் பாலி பகுதியில் கர்ரா ஆற்று பாலத்தின் மீது வந்து கொண்டிருந்தபோது, டிராக்டரின் சக்கரம் ஒன்று எதிர்பாரதவிதமாக கழன்று ஓடியது. இதனால் டிராக்டர் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த சம்பவத்தில் வாகனத்தில் இருந்த 24 பேர் நீரில் மூழ்கியுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து, தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை மற்றும் வெள்ள மீட்பு பணி குழுக்களை சேர்ந்தவர்கள் அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் இதுவரை 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்.
இந்த விபத்தில் முகேஷ் என்பவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார். அவரது உடலை மீட்பு படையினர் மீட்டுள்ளனர். மேலும் நீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். ஆற்றில் கவிழ்ந்த டிராக்டரை கிரேன் மூலம் கயிறு கட்டி மீட்கப்பட்டுள்ளது.







