ஆசிய கோப்பை கிரிக்கெட் : இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேசம் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

ஆசிய கோப்பை கிரிக்கெட்  இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேசம் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்4 சுற்றில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் இந்தியா,…

ஆசிய கோப்பை கிரிக்கெட்  இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேசம் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்4 சுற்றில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் இந்தியா, வங்காளதேச அணிகள் மோதின.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசியது. இதனையடுத்து பேட்டிங் செய்த வங்காளதேசம் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டு இழப்புக்கு 265 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷகிப் அல் ஹசன் 80 , தௌஹித் ரிடோய் 54 , நசும் அகமது 44 ரன்கள் சேர்த்தனர். இந்தியா சார்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டும், முகமது ஷமி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆடடக்காரர் ஆட்டக்காரர் சுப்மன் கில் சதமடித்த நிலையில், மறு முனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. திலக் வர்மா 5, இஷான் கிஷன், 5 கே.எல்.ராகுல் 19, சூர்யகுமார் யாதவ் 26, ஜடேஜா 7 ரன்கன் சேர்த்து வெளியேறினர்.

இறுதியில் இநதிய அணி 259 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் வங்க தேச அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.