தமிழ்நாட்டுக்கு கர்நாடகா தண்ணீர் தர மறுத்து வரும் நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் வரும் திங்கட்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என்று கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், வரும் திங்கட்கிழமை காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரகூட்டம் நடைபெற உள்ளது. இதில், காவிரி நீர் பங்கீடு குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.







