சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தங்களது 4 ஆவது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது தென்னாபிரிக்கா அணி அசத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 416 ரன்கள் குவித்தது. அபாரமாக விளையாடிய ஹென்றி கிளாசன் 13 சிக்சர்கள், 13 பவுண்டரிகள் விளாசி 174 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் மூலம் 5 ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கி அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையும், தென் ஆப்ரிக்கா அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 5 ஆவது அதிகபட்ச ஸ்கோர் விளாசிய பேட்டர் என்ற பெருமையையும் ஹென்றி கிளாசன் தட்டிச்சென்றார்.
அதே சமையம் டேவிட் மில்லர் 45 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார். பந்து விச்சை பொறுத்தவரை ஆஸி அணியின் பந்துவீச்சாளர் ஆடம் ஜாம்பா 10 ஓவர்கள் வீசி 113 ரன்கள் விட்டுக்கொடுத்து, இதற்கு முன்னதாக 2006 இல் இதே மோசமான சாதனை செய்த மிக் லீவிஸ் சாதனையை சமன் செய்தார்.