2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அசோகா பல்கலைக்கழகம் சார்பில் பேராசிரியர்கள், மாணவர்கள் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அசோகா பல்கலைக்கழகத்தின் பொருளாதார உதவிப் பேராசிரியரான சப்யசாச்சி தாஸ் எழுதிய ஆய்வுக் கட்டுரையானது, காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையிலான அரசியல் சண்டையில் புகழ்பெற்ற அசோகா பல்கலைக்கழகத்தை பிரச்சனையில் சிக்க வைத்துள்ளது. “உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தில் ஜனநாயகப் பின்னடைவு” என்ற தலைப்பில், நெருக்கமாகப் போட்டியிட்ட தொகுதிகளில் பிஜேபியின் விகிதாசார வெற்றிகளை ஆராய்ந்து, தேர்தல் முறைகேடுக்கான சாத்தியக்கூறுகளை இது பரிந்துரைத்தது.
மேலும் தற்போது ஆளும் பாஜகவின் வெற்றி என்பது பூஜ்ஜியத்தின் மதிப்பில் ஒரு நிலையான உயர்வைக் காட்டியதாகவும், பிஜேபி வெற்றி பெற்ற தொகுதிகளில் நிறைய தேர்தல் முறைகேடுகள் நடந்திருப்பதாவும், வெற்றிக்காக கடுமையான போட்டிகள் நிலவியதாகவும் பேராசிரியர் சப்யசாச்சி தாஸ் கூறியுள்ளார். இதுமட்டுமின்றி பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகளில் மாநில சிவில் சர்வீஸ் அதிகாரிகள் குவிக்கப்படலாம் என்ற கருத்தையும் கட்டுரையில் தெரிவித்துள்ளது.
இந்த இதழில் வெளியான முடிவுகள் காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினர்களிடையே கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆராய்ச்சி குறித்த ட்விட்டர் பதிவைப் பகிர்ந்துள்ள காங்கிரஸ் எம்பி சசி தரூர், இது “மிகவும் கவலையளிக்கிறது”. இதில் கூறப்பட்ட வாதங்களுக்கு விரிவான பதில்களை வழங்குமாறு தேர்தல் ஆணையத்தையும் இந்திய அரசையும் வலியுறுத்துருக்கிறேன். முன்வைக்கப்பட்ட ஆதாரங்களை புறக்கணிக்க முடியாது என்றும், தீவிர அரசியல் தாக்குவதற்கு பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மறுபுறம், பாஜக எம்.பி.க்கள் ஆராய்ச்சியின் முடிவுகள் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதில் சப்யசாசி தாஸின் ஆய்வுக் கட்டுரைக்கு அசோகா பல்கலைக்கழகத்தின் பதில் போதுமானதாக இல்லை என்று நிஷிகாந்த் துபே கூறினார். மேலும் இது இந்தியாவின் துடிப்பான தேர்தல் செயல்முறையை இழிவுபடுத்தும் முயற்சி. கொள்கை விஷயங்களில் பிஜேபியுடன் கருத்து வேறுபாடு கொள்வது நல்லது அல்ல. அரைவேக்காட்டு ஆராய்ச்சி என்ற பெயரில் ஒருவர் இந்தியாவின் துடிப்பான கருத்துக் கணிப்புச் செயல்முறையை எப்படி இழிவுபடுத்த முடியும்? இதற்கு எந்த பல்கலைக்கழகமம் இப்படி அனுமதிக்காது. இதற்கு நிச்சயம் சரியான பதிலை பல்கலைக்கழகம் அளிக்க வேண்டும் என்று தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
டெல்லி பாஜக எம்பி பிரவேஷ் சிங் வர்மா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையை விமர்சித்தார். இது காகிதத்தைப் போலவே குறைபாடுள்ளது என்று கூறினார். இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பு எவ்வாறு சீரழிக்கபடுகின்றன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்ட தொடர்ந்து விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த சர்ச்சையை தீர்க்க, அசோகா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில்அசோகா பல்கலைக்கழகம் பல்வேறு துறைகளில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குகிறது. புகழ்பெற்ற பத்திரிகைகளில் வெளியிடப்படும் இதுபோன்ற ஆராய்ச்சிகளை மேற்கொள்ள எங்களது நிறுவனத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் அனுமதி கேட்கும் பொழுது அதனை ஊக்கப்படுத்த மட்டுமே செய்கிறோம். பேராசிரியர்கள் ,மற்றும் மாணவர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வுக் கட்டுரை இன்னும் மறுஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
எங்களது கல்வி இதழிலும் இந்த ஆராய்ச்சி தொடர்பான கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படவில்லை. சமூக ஊடக செயல்பாடு அல்லது பொது நடவடிக்கைகளில் ஈடுபடும் தனிப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்களால் நடத்தப்படும் ஆராய்ச்சி இது. இதற்கும், எங்களது கல்வி நிறுவனத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று அசோகா பல்கலைக்கழகத்தின் இணை நிறுவனர்களான சஞ்சீவ் பிக்சந்தானி மற்றும் ஆஷிஷ் தவான் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
https://twitter.com/AshokaUniv/status/1686353237904150528?s=20
- பி.ஜேம்ஸ் லிசா







