இனி 3 மாத்திரை வேண்டாம்! அனைத்தும் ஒரே மாத்திரையில்… “ஸ்விஸ் கார்னியர்”வின் புதிய அறிமுகம்..

நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் மாத்திரைகளை எடுத்து கொள்ளாத வகையில் ஒரு புதிய முறையை மருந்து உற்பத்தி நிறுவனமான ஸ்விஸ் கார்னியர் அறிமுகப்படுத்தி உள்ளது. அது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்… நவீன உலகில்…

நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் மாத்திரைகளை எடுத்து கொள்ளாத வகையில் ஒரு புதிய முறையை மருந்து உற்பத்தி நிறுவனமான ஸ்விஸ் கார்னியர் அறிமுகப்படுத்தி உள்ளது. அது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்…

நவீன உலகில் நாளுக்கு நாள் புது புது கண்டுபிடிப்புகள் வந்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் புதிய புதிய கொள்ளை நோய்களும், வைரஸ் கிருமிகளும் உருவாகி நம்மை அச்சுறுத்திக் கொண்டும் இருக்கின்றன. மாறி வரும் வாழ்க்கை முறையால் சர்க்கரை நோய் , ரத்த அழுத்தம், தைராய்டு, மாரடைப்பு என இளம் வயதினரும் பாதிப்படைந்து வருகின்றனர்.

நோய்கள் அதிகரிப்பதால் அதற்காக நாம் பயன்படுத்த கூடிய மாத்திரை, மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மாத்திரைகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க மனதளவிலும் சிலருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அவ்வாறு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும், அதிக அளவில் மாத்திரைகள் எடுத்து கொள்வதை தவிர்க்கும் வகையில் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது ஸ்விஸ் கார்னியர் மருந்து உற்பத்தி நிறுவனம்.

3 மாத்திரைகள் எடுக்க வேண்டிய ஒருவர் ஒரே மாத்திரை எடுத்தால் போதும் என்றால் உங்களால் நம்ப முடியுமா. ஆனால் அது தான் உண்மை. மூன்று மாத்திரையில் உள்ள சத்துக்களும் ஒரே மாத்திரையில் கிடைக்கும் வகையில் ஸ்விஸ் கார்னியர் நிறுவனத்தால் மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

மூன்று மாத்திரையை இணைந்து ஒரே மாத்திரை என்றால் எப்படி விழுங்க முடியும் என அச்சம் ஏற்படுவது இயல்பே. ஆனால் மக்கள் எளிதில் விழுங்கும் வகையிலே இவை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வகை மாத்திரைகளை பொதுமக்கள் எடுத்துக்கொள்ளும் போது அதிகளவு மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறோம் என்ற எண்ணம் பொதுமக்களுக்கு ஏற்படாது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

வெளிநாடுகளில் இந்த புதிய வகை மாத்திரைகளுக்கு அதிக வரவேற்ப்பு கிடைத்துள்ளதாக ஸ்விஸ் கார்னியர் நிறுவனர்கள் கூறும் நிலையில் விரைவில் இந்தியாவிலும் இந்த மாத்திரைகள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை காணொளியாக காண: 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.