ஆந்திரா ரயில் விபத்திற்கு ஓட்டுநர்களின் தவறே காரணம் – ரயில்வே அறிவிப்பு

ஆந்திராவில் ஏற்பட்ட ரயில் விபத்திற்கு ஓட்டுநர்களின் தவறே காரணம் என  ரயில்வே அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு நேற்று முன்தினம் பயணிகள் ரயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த…

ஆந்திராவில் ஏற்பட்ட ரயில் விபத்திற்கு ஓட்டுநர்களின் தவறே காரணம் என  ரயில்வே அறிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு நேற்று முன்தினம் பயணிகள் ரயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலும் விசாகப்பட்டினம்-பாலசா பயணிகள் ரயிலும் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளி தண்டவாளத்தில் மோதி விபத்துக்குள்ளாகின.

விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரயிலில் பிரேக் பிடிக்காத நிலையில் அது தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில், அதே தண்டவாளத்தில் விசாகப்பட்டினம்-பாலசா பயணிகள் ரயில் வந்ததால் இவ்விபத்து நடந்துள்ளது.

இதில் 3 பெட்டிகள் தடம் புரண்டுடன. அதில் இருந்த பயணிகள் காயமடைந்து உயிருக்கு போராடினார்கள். பயணிகள், ரயில்வே போலீசார், தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக விரைந்து சென்று மீட்பு பணியை தொடங்கினர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், 15க்கும் மேற்பட்டோர்  பலியாகி உள்ளனர்.

இந்த விபத்தில் மின்சார வயர் அறுந்து விழுந்த காரணத்தால் விசாகப்பட்டினத்தில் இருந்து முதலில் சென்ற ரயில் கண்டகபள்ளி ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த நிலையில் அதன்பின் வந்த ரயில் நின்று கொண்டிருந்த
ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

தொழில்நுட்ப கோளாறு அல்லது இயந்திர கோளாறு ஆகியவற்றின் காரணமாக வழித்தடத்தின் இடையே ரயில் நிறுத்தப்பட்டால் அது பற்றிய தகவல் உடனடியாக ரயில்வே துறையில்  இருக்கும்.  தானியங்கி தகவல் தொழில்நுட்ப முறை மூலம் அருகில் உள்ள ரயில் நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிக்கு கிடைத்துவிடும். ஆனால் சிக்னல் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது
இந்த நிலையில் கண்டகப்பள்ளி- அலமண்டா ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள 2 தானியங்கி சிக்னல்களில் பழுது ஏற்பட்டுள்ளது. இது போன்ற காலகட்டங்களில், அந்த சிக்னல்களில் 2 நிமிடம் நின்று பிறகு மணிக்கு 10 கி.மீ வேகத்தில் ரயிலை இயக்க வேண்டும். இந்த நடைமுறையை பலாசா ரயிலின் டிரைவர் சரியாக பின்பற்றி உள்ளார்.
சிக்னலில் நின்று, பின்னர் மெதுவாக ரயிலை இயக்கி உள்ளார்.

ஆனால், ராயகடா ரயிலின் டிரைவர் இந்த விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை. சிக்னலை சரியாக கவனிக்காமல் வேகமாக ரயிலை இயக்கியதால்தான் இந்த விபத்து நடந்துள்ளது. இதற்கு டிரைவர் ராவ் மற்றும் உதவி டிரைவர்தான் காரணம் என்று ரயில்வே துறை விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்ஜின் டிரைவர் ராவ் விபத்தில் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.