முக்கியச் செய்திகள் இந்தியா

இந்திய தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம்

இந்திய தேர்தல் ஆணையராக ஓய்வுபெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அருண் கோயலை  நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் உள்ளார். அவருக்கு அடுத்து தேர்தல் ஆணையராக அனுப் சந்திர பாண்டே பதவி வகித்து வருகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயலை மத்திய சட்ட அமைச்சகம் நியமனம் செய்துள்ளது. மேலும் இவரது நியமனத்துக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார். தற்போது இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான அருண் கோயல் 1985 பஞ்சாப் கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். இவர் மத்திய கனரக தொழிற்சாலை அமைச்சகத்தின் செயலாளராக பதவி வகித்து வந்தார். அண்மையில் விஆர்எஸ் பெற்று தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். குஜராத் மாநில சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு விரைவில் நடைபெற இருக்கிறது. அடுத்த மாதம் 2 மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

அதை தொடர்ந்து கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. 2024ம் ஆண்டு நாடே எதிர்பாக்கும் மக்களவைத் தேர்தலும் நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் அருண் கோயலின் இந்த நியமனம் முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தற்காலிக முகாம்களில் இருந்து மக்களை வெளியேற்ற முயற்சி

EZHILARASAN D

விருந்தில் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு

G SaravanaKumar

சை டிஷ் வாங்குவதில் தகராறு; பழிக்கு பழி கொலை

G SaravanaKumar