முக்கியச் செய்திகள் தமிழகம்

கனமழை எச்சரிக்கையை வாபஸ் பெற்ற தமிழ்நாடு அரசு

இன்று விடப்பட்டிருந்த மிக கனமழைக்கான எச்சரிக்கைக்கான அறிவுரைகள் திரும்ப பெறப்படுவதாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்டைத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிக்கையின் படி, இன்று (19-11-2022) காலை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையால், 20-11-2022 முதல் 22-11-2022 வரை பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று செய்தி வெளியீடு வழங்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் இன்று (19-11-2022) 3.00 மணி அளவில் வந்த இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிக்கையின்படி, பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்கிய மிக கனமழை எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டுவிட்டது. ‌

இந்நிலையில் இன்று (19-11-2022) காலை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் வழங்கப்பட்ட மிக கனமழை எச்சரிக்கைக்கான அறிவுரைகள் திரும்ப பெறப்படுகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனருக்கு இலக்கு நிர்ணயம்- சென்னை போக்குவரத்து கழகம் உத்தரவு

G SaravanaKumar

சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் – ஐசிசி விருதை தட்டிச் சென்ற சூர்யகுமார் யாதவ்

Web Editor

குற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Web Editor