முக்கியச் செய்திகள் தமிழகம்

கலை, அறிவியல் கல்லூரிகளில் 25% கூடுதல் இடங்கள்

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் கூடுதலாக 25% இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் மவுசு உயர்ந்து கொண்டே வருகிறது. நடப்பு கல்வியாண்டிலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டினர். தமிழ்நாடு முழுவதும் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில், அதிகரிக்கும் தேவையைக் கருத்தில் கொண்டு 25 சதவீத இடங்களை அதிகப்படுத்த உயர் கல்வித்துறை முடிவு செய்தது.

அதன்படி, கலை படிப்புகள் அனைத்திலும் 25 சதவீத கூடுதல் இடங்களுக்கும், அறிவியல் படிப்புகளில் ஆய்வக வசதிக்கேற்க 25 சதவீத கூடுதல் இடங்களுக்கும் உயர் கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது. மேலும், கூடுதலாக உள்ள 25 சதவீத இடங்களில் மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கு, தொடர்புடைய பல்கலைக்கழகங்களிடம் அந்தந்த கல்லூரிகள் அனுமதி பெற வேண்டும் என்றும் உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றி உறுதியானது!

Jayapriya

கோயில் சொத்துக்களை முறைகேடாக விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு

Gayathri Venkatesan

அமெரிக்க நாடாளுமன்ற வன்முறையை தொடர்ந்து 70,000 ட்விட்டர் கணக்குகள் முடக்கம்!

Saravana