முக்கியச் செய்திகள் உலகம்

ஆப்கன் புதிய பிரதமர்: தலிபான்கள் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் பிரதமராக முல்லா முகமது ஹசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து, தலிபான்களின் ஆதிக்கம்  மீண்டும் எழுச்சி பெற தொடங்கியது. கடந்த மாதம் தலைநகர் காபூலுக்குள் நுழைந்து ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் புதிய அரசு தொடர்பான அறிவிப்பை  தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் வெளியிட்டார்.

அதன்படி, ஆப்கானிஸ்தானின் பிரதமராக முல்லா முகமது ஹாசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.  துணை பிரதமராக முல்லா பராதர் செயல்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. மவ்லவி அப்துல் சலாம் ஹனாபி என்பவரும் துணை பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல்,  தற்காலிக வெளியுறவுத்துறை அமைச்சராக மவுலவி அமிர்கான்  முத்தாகி செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு இயக்குநரகத்தின் தலைவராக முல்லா அப்துல் ஹக் வாஸிக் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மவ்லவி காரி பாசிஹுதீன் ராணுவத் தலைவராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லா ஹெடையத்துல் பத்ரி தற்காலிக நிதியமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஷேக் மொலவி நூருல்லா முனீர், கல்வித் துறை அமைச்சராகவும் காரி தின் ஹனிப் பொருளாதார துறை தலைவராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

நீட் தேர்வு பாதிப்பை ஆராய அமைக்கப்பட்ட குழு: 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கருத்து!

Vandhana

மீண்டும் கோவிட் மையங்கள்: தமிழக அரசு அறிவிப்பு!

Ezhilarasan

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

Halley karthi