முக்கியச் செய்திகள் உலகம்

கொரோனாவில் இருந்து மீண்டார் 117 வயது மூதாட்டி!

உலகின் இரண்டாவது மிக மூத்தவரான 117 வயது மூதாட்டி சிஸ்டர் ஆண்ட்ரே கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளார்.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது பல்வேறு நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக கொரோனா முன்களப் பணியாளர்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக முதியவர்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். ஆனால் சிலர் மன உறுதியுடன் கொரோனாவை எதிர்த்து போராடி மீண்டு வந்தது மற்றவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக இருந்தது.

அந்தவகையில் பிரான்ஸை சேர்ந்த 117 வயது மூதாட்டி கொரோனாவில் இருந்து மீண்டு வந்து தனது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடியுள்ளார். ஆனால் அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இருந்துள்ளது. தனக்கு மரணம் குறித்து பயம் இல்லாததால், கொரோனா வந்த பிறகும் பயம் இல்லாமல் இருந்ததாக மூதாட்டி தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக மிகவும் குறைவான நபர்களை வைத்து மட்டுமே அவரது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

கொரோனா வைரஸ்: இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 3,417 பேர் உயிரிழப்பு!

Ezhilarasan

18-45 வயதுள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த 3 ஆண்டுகள் ஆகும்

ஆசியாவின் 50 பிரபலங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த சோனு சூட்!

Jayapriya

Leave a Reply