மர்ம நபர்கள் தீ வைப்பு – காராமனி பயிர் தீயில் கருகி நாசம்

கண்டமங்கலம் அருகே , அறுவடை செய்து வைத்திருந்த காராமனி பயிரை, மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தியதில் இரண்டு லட்சம் மதிப்புள்ள பயிர் கருகி நாசம். விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகேயுள்ள பக்கிரிபாளையம் பகுதியில் ,…

கண்டமங்கலம் அருகே , அறுவடை செய்து வைத்திருந்த காராமனி பயிரை, மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தியதில் இரண்டு லட்சம் மதிப்புள்ள பயிர் கருகி நாசம்.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகேயுள்ள பக்கிரிபாளையம் பகுதியில் ,
வசித்து வரும் விஜயா என்பவர் அதே பகுதியில் 4 ஏக்கர் விவசாய நிலத்தில் காராமணி
பயிர் செய்திருந்தார். இந்த பயிர் முழுவதும் அறுவடைக்கு தயாரான நிலையில்,
நேற்றைய தினம், நான்கு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த காராமணி பயிரினை
அறுவடை செய்து, கழனியிலையே காராணமனி பயிரினை கும்பலாக வைத்துள்ளனர்.

இந்நிலையில், இரவு மர்ம நபர்கள் காராமணி பயிரை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதில், நான்கு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த இரண்டு லட்சம் மதிப்பிலான காராமனி பயிர் முழுவதுமாக எரிந்து சேதமாகின. காரமனி பயிர் தீ வைத்து கொளுத்த பட்ட சம்பவம் குறித்து பாதிக்கபட்ட விஜயா, கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அழித்தார். காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

கு. பாலமுருகன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.