கும்பகோணம் அருகே தாராசுரத்தில் கடனுக்கு மது தராததால் பாரில் வேலை செய்த வீரமணி என்பவரை பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது.
கும்பகோணம் அருகே தாராசுரத்தில் அரசு மதுபான கடை உள்ளது. இந்த பாரில் வீரமணி என்பவர் வேலை செய்து வருகிறார். மற்றும் இவரது நண்பர்கள் குமார் மற்றும் ரவி ஆகியோரும் நேற்று மதியம் பாரில் இருந்துள்ளனர். அப்போது தாராசுரம் பகுதியைச் சேர்ந்த ரவுடி டைப் என்கிற ஐயப்பன் வீரமணியிடம் கடனுக்கு மது கேட்டுள்ளார்.
ஐயப்பன் மது தர மறுக்கவே பாரில் இருந்த இரண்டு காலி பீர் பாட்டில்களை
எடுத்துக்கொண்டு வெளியேறி அவர், சற்று நேரம் கழித்து மீண்டும் பாருக்குள்
வந்த மீண்டும் கடனுக்கு மது கேட்கிறார். இந்த முறையும் ஐயப்பன் மறுக்கவே கையில் மறைத்து வைத்திருந்த இரண்டு பீர் பாட்டிலால் ஐயப்பன் தலையில் மாறி, மாறி அடித்து
விட்டு வெளியே சென்றுள்ளார்.
வெளியே செல்லும்போது வழியிலிருந்த குமார் மற்றும் ரவிக்கு முகம் மற்றும்
நெற்றிப் பகுதியில் கையால் குத்தி விட்டு சென்றுகுக்கிறார். இந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. இந்த காட்சியைக் கொண்டு பார் நடத்தும் வீரபாண்டி கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதுடன் தாராசுரம் பகுதியில் தலைமறைவாக இருந்த ரவுடி டைப் என்கிற ஐயப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
டைப் என்கிற ஐயப்பன் கும்பகோணம் தாலுகா காவல் நிலைய ரவுடி பட்டியலில் உள்ளார்.
ரவுடி டைப் என்கிற ஐயப்பன் அடித்ததில் காயமடைந்த வீரமணி, குமார், ரவி ஆகிய
மூவரும் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடனுக்கு மது தராததால் பார் ஊழியர் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கப்பட்ட
சம்பவம் கும்பகோணம் மற்றும் தாராசுரம் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.







