கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி; எரிபொருள் விலை குறையுமா?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இந்த ஆண்டு இதுவரை இல்லாத வகையில் குறைந்திருப்பதால் எரிபொருட்களின் விலை குறைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சியால் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து…

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இந்த ஆண்டு இதுவரை இல்லாத வகையில் குறைந்திருப்பதால் எரிபொருட்களின் விலை குறைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சியால் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை இல்லாத வகையில் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கான ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை சுமார் 113 அமெரிக்க டாலர்களில் இருந்து 82 டாலர்களாக குறைந்துள்ளது.

இதே விலை நிலவரம் நீடிக்கும் பட்சத்தில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு கலால் வரியை குறைத்ததன் பயனாக கடைசியாக கடந்த மே மாதம் 22ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 ரூபாயும் டீசல் விலை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்பட்டது.

எனினும் ஓபெக் எனப்படும் பெட்ரோலிய கூட்டமைப்பு நாடுகளின் கூட்டம் வரும் 4ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கச்சா எண்ணெய் தற்போதைய உற்பத்தி அளவு குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

அதில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்தே தற்போதைய கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் எரிபொருட்களின் விலை குறையுமா? இல்லையா என்பது உறுதியாகத் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.