வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் யாரும் கோராத தொகையாக, சுமார் ரூ.50 ஆயிரம் கோடி உள்ளது என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கராட் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய இணை அமைச்சர் இதை தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ரிசர்வ் வங்கி அளித்த தகவலின்படி, கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை, வங்கிகளிடம் கோரப்படாத தொகையாக ரூ. 24 ஆயிரத்து 356 கோடி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்சூரன்ஸ் நிறுவனங்களிடமும் ரூ. 24 ஆயிரத்து 586 கோடி கோரப்படாமல் இருப்ப தாகத் தெரிவித்துள்ள அவர், மொத்தம், 48 ஆயிரத்து 942 கோடி ரூபாய் கோரப்படாமல் உள்ளதாகக் கூறியுள்ளார்.
இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பத்தாண்டுகளுக்கு மேல் கோரப்படாமல் இருக்கும் தொகை, மூத்த குடிமக்கள் நல நிதிக்கு மாற்றப்படுவது வழக்கம்.
அதே போல, ரிசர்வ் வங்கி முதலீட்டாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதி என்ற திட்டத்தை 2014-ஆம் ஆண்டு துவக்கியுள்ளது. வங்கிகளில் கோரப்படாத தொகை, இந்த நிதிக்கு மாற்றப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.