ஆரணியில் காளியம்மனுக்கு பால் குடம் ஏந்திய பக்தர்கள்!

ஆரணியை அடுத்த துரிஞ்சாபுரம் கிராமத்தில் காளியம்மனுக்கு பால் குடம் ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த துரிஞ்சாபுரம் கிராமத்தில் கிராம தேவதையாக விளங்கும் காளியம்மனுக்கு கோயில் உள்ளது. இங்கு சித்திரை…

ஆரணியை அடுத்த துரிஞ்சாபுரம் கிராமத்தில் காளியம்மனுக்கு பால் குடம் ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த துரிஞ்சாபுரம் கிராமத்தில் கிராம தேவதையாக விளங்கும் காளியம்மனுக்கு கோயில் உள்ளது. இங்கு சித்திரை மாத விசேஷ பூஜைகாக பெண்கள் காப்பு கட்டி விரதம் இருந்து பால் குடம் எடுத்தனர்.

பொதுமக்கள் பால் குடம் ஏந்தி கிராமத்தில் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து பின்னர் காளியம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டனர். பெண்கள் பால்குடம் ஊர்வலம் வந்தபோது, அம்மன் வேடமடைந்து சாமி ஆடிக்கொண்டு ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறி அருள் ஆசி வழங்கினர்.

—-ம.ஶ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.