இந்து கோயில் நிர்வாகத்தில் இருந்து அரசு விலக வேண்டும் : அர்ஜுன் சம்பத்

இந்து கோயில் நிர்வாகத்தில் இருந்து அரசு விலக வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் கேட்டுக் கொண்டுள்ளார். சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் இந்து மக்கள் கட்சியின்…

இந்து கோயில் நிர்வாகத்தில் இருந்து அரசு விலக வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் கேட்டுக் கொண்டுள்ளார்.

சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத், சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொண்டு சிறப்பாக குடமுழுக்கு நடத்தலாம்.

ஆனால், சிலர் இதனை தடுக்க நினைக்கின்றனர் எனவும், இந்தநிலை மாற வேண்டுமானால் இந்து கோயில் நிர்வாகத்தில் இருந்து விலக வேண்டும் எனவும் கூறினார். மேலும், கோயில்களை அறங்காவலர் குழு அமைத்து இந்துக்களே நடத்தே வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.