முக்கியச் செய்திகள் இந்தியா

ஆக்சிஜன் பற்றாக்குறை: டெல்லியில் 20 பேர் உயிரிழப்பு!

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 20 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 24,331 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 348 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் டெல்லியில் தற்போது 92,000 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் டெல்லியில் உள்ள ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையில், நேற்று கொரோனா சிகிச்சை பெற்று வந்த 20 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டி.கே பாலூஜா கூறுகையில் ‘ 3.5 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அரசிடமிருந்து எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. நேற்று மாலை 5 மணிக்கு வந்தடைய வேண்டிய ஆக்சிஜன் டேங்கர் நள்ளிரவில்தான் வந்தடைந்தது. ஆக்சிஜன் வந்தடையத் தாமதமானதால் 20 பேர் உயிரிழந்துள்ளனர்’ என்று தெரிவித்தார்.

இதுபோன்று மோல்சந்த் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் மது ஹந்தா கூறுகையில் ‘எங்களிடம் அரை மணி நேரத்திற்கான ஆக்சிஜன் மட்டுமே இருக்கிறது. இதுபோன்று மற்ற மருத்துவமனைகளும் இதே சிக்கலைச் சந்தித்து வருகிறது’ என்று அவர் தெரிவித்தார். மேலும் இதைப் பேசும்போது அவரது குடல் நடுங்கியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அரசை குறைகூற முடியாதவர்கள் மதத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்- முதலமைச்சர்

G SaravanaKumar

தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் தொற்று: இன்று 7427 பேருக்கு பாதிப்பு!

Vandhana

கோரமண்டல் விரைவு ரயிலில் பயணித்த தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் நிலை என்ன?? – LIVE UPDATES

Jeni