செய்திகள்

சிவராத்திரிக்கு பொது விடுமுறை அறிவிக்க அர்ஜுன் சம்பத் கோரிக்கை!

தமிழக அரசு தைப்பூச தினத்திற்கு பொது விடுமுறை அறிவித்ததற்கு வரவேற்பு தெரிவித்துள்ள இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மகா சிவராத்திரிக்கு பொது விடுமுறை அறிவிக்க தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே சித்தோட்டில் இந்து மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் அர்ஜுன் சம்பத் வரும் சட்டமன்ற தேர்தலில் இந்து மக்கள் கட்சி 234 தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து கலந்து ஆலோசித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதன்பின்னர் செய்தியாளரிடம் பேசிய அர்ஜுன் சம்பத் தமிழக அரசு வரும் தைப்பூச தினத்தன்று தமிழகத்தில் பொது விடுமுறை அறிவித்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் இதேபோன்று பெரும்பாலான இந்துக்கள் கொண்டாடும் மகாசிவராத்திரியன்று பொது விடுமுறை அறிவிக்க தமிழக அரசு பரிசீலனை செய்து ஆணையை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.

நடிகர் கமல்ஹாசன் அப்துல் கலாம் இருந்தபோது அவரது கொள்கைகளை ஆதரிக்காத நிலையில் தற்போது அரசியலுக்காக காந்தி அப்துல் கலாம் போன்ற தலைவர்களின் பெயர்களை பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றார். தமிழக அரசு வரும் ஜனவரி 13ஆம் தேதி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் இல்லையெனில் விவசாயிகள் தென்னை பனை பால்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் இதை தொடர்ந்து பேசிய அர்ஜுன் சம்பத் மதுரையில் வரும் 23-ஆம் தேதி இந்து மக்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது இதில் இந்து மக்கள் கட்சி 234 தொகுதிகள் போட்டியில் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தளபதி மட்டுமே கைவிட்ட நிலையில் ஆன்மீக அரசிலை கைவிடவில்லை என்று கூறிய அர்ஜுன் சம்பத் அவர் ஆன்மீக அரசியல் பின்பற்றுபவர்களுக்கு தான் ஆதரவு அளிப்பார் என்றும் அதன்பேரில் வரும் சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவையும் ஆசிர்வாதம் பெற்று தேர்தலை சந்திக்க இருப்பதாக தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து வரி விலக்கு: கமல்ஹாசன் வலியுறுத்தல்!

Halley Karthik

அசானி புயல்: ஆந்திரத்தில் பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு

Halley Karthik

தாய்லாந்து மீனவ சகோதரர்களுக்குச் சிக்கிய பலக்கோடி மதிப்பிலான அரியவகை முத்து!

Jayapriya

Leave a Reply