முக்கியச் செய்திகள் தமிழகம்

பொங்கலுக்குப் பின் பள்ளிகள் திறப்பு? நாளை முதல் கருத்துக் கேட்பு கூட்டம்!

பொங்கலுக்குப் பின் பள்ளிகளைத் திறக்கலாமா? என்பது குறித்து முடிவெடுக்க நாளை முதல் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சென்னை எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், இணை இயக்குநர் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கண்ணப்பன், பள்ளி வளாகங்கள் தயார் நிலையில் உள்ளதா? என்றும் அதற்கான ஆயத்தப்பணிகள் குறித்தும் ஆய்வு செய்ததாக தெரிவித்தார். பள்ளிகளைத் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நாளை முதல் 8-ம் தேதி வரை நடைபெறும் என்றும் அவர் கூறினார். தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்வர் என்றும் பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பொதுமக்களின் கருத்துக்கள் ஆலோசிக்கப்படும்- மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

Dinesh A

கேரளாவில் கல்வி முறை சரியில்லை – ஆளுநர் ஆரிப் கான் கருத்து

EZHILARASAN D

சிவாச்சாரியார்கள், பட்டாச்சார்யர்களுக்கு கோயில்களில் அர்ச்சனை செய்ய சட்ட உரிமை இருக்கிறது – வழக்கறிஞர் பேட்டி

Dinesh A

Leave a Reply