அரியலூர் முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு!

அரியலூர் – மீன்சுருட்டி அருகே சுத்துகுளம் முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே சுத்துகுளம் கிராமத்தில் உள்ள முனீஸ்வரர் கோயிலில் பங்குனி மாதம் நடைபெறும் விழாவை…

அரியலூர் – மீன்சுருட்டி அருகே சுத்துகுளம் முனீஸ்வரர் கோயில் திருவிழாவை
முன்னிட்டு மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே சுத்துகுளம் கிராமத்தில் உள்ள
முனீஸ்வரர் கோயிலில் பங்குனி மாதம் நடைபெறும் விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு
போட்டி துவங்கியது. இதனை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் துவக்கி
வைத்தார்.

இதில் அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் இருந்து 300 க்கும்
மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இதில் சுமார் 200 க்கும் மேற்பட்ட மாடு
பிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில் அவிழ்த்து விடப்பட்ட காளைகளுக்கு பரிசாக
வேட்டி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வந்த
ஏராளமானப் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

—ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.