செயலிழந்த Google Search என்ஜின் – வெறுப்படைந்த இணையவாசிகள்

இணையவாசிகள் பலர் இன்று காலை முதல் Google Search என்ஜின் செயலிழந்ததாக புகாரளித்து வருகின்றனர்.  Google Search என்ஜின் பயனர்கள் தங்கள் ஜிமெயில் கணக்குகள் மற்றும் கூகுள் ஆவணங்கள் போன்றவற்றில் உள்நுழைவதில் சிக்கல்களை எதிர்கொண்டதாக…

இணையவாசிகள் பலர் இன்று காலை முதல் Google Search என்ஜின் செயலிழந்ததாக புகாரளித்து வருகின்றனர். 

Google Search என்ஜின் பயனர்கள் தங்கள் ஜிமெயில் கணக்குகள் மற்றும் கூகுள் ஆவணங்கள் போன்றவற்றில் உள்நுழைவதில் சிக்கல்களை எதிர்கொண்டதாக சமூக வலைதளங்களில் புகார்களை பதிவிட்டு வருகின்றனர்.

டவுன்டெக்டர் இணையதளம் (டவுன்டெக்டர் என்பது ஒரு ஆன்லைன் தளமாகும், இது பல்வேறு இணையதளங்கள் மற்றும் சேவைகளின் நிலையைப் பற்றிய நிகழ்நேர தகவலை பயனர்களுக்கு வழங்குகிறது) காலை 11 மணிக்குப் பிறகு 2,000 க்கும் அதிகமான செயலிழப்பு அறிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் காட்டியது.

இந்த Google சர்ச் என்ஜின் சிக்கல்களைப் புகாரளித்த பயனர்களில் 82% பேர் இது சர்வர் இணைப்பு என்றும், 12% பேர் உள்நுழைவு சிக்கல்கள் இருப்பதாகவும், 6% பேர் அஞ்சல் பெறுவதில் சிக்கலை எதிர்கொண்டதாகக் கூறியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.