பரமக்குடி ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில் ஏராளமானோர் கலந்துக்கொண்டு அம்மனுக்கு பல்வேறு வகையான பூக்களை சமர்பித்து வழிபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தின் 68 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நகரின் 58 இடங்களில் பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்பினர் சார்பில் மல்லிகை, ரோஜா,தாமரை,உள்ளிட்ட ஐம்பதிற்கும்
மேற்பட்ட பல்வேறு வகையான பூக்களை கட்டில் வைத்து அம்மனுக்கு செலுத்த ஊர்வலமாக எடுத்து செல்ல திட்டமிட்டனர்.
இதையும் படியுங்கள் : தொழிலாளியின் மகள் திருமணத்திற்கு வந்த சிங்கப்பூர் முதலாளிகள்! வரவேற்பளித்து முதுகுளத்தூரை அதகளம் செய்த தொழிலாளி!
பின்னர், அனைத்து வகையான 2 டன் அளவிளான பூக்களையும் மேளதாளத்துடன் ஸ்ரீ
முத்தால பரமேஸ்வரி அம்மன் ஆலத்திற்கு நகர் முழுவதும் ஊர்வலமாக எடுத்துச்சென்று
அம்மனுக்கு சமர்பித்து வழிபட்டனர். இதையடுத்து, கரகாட்டம், குழந்தைகளின் கலை நிகழ்ச்சி, உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
சுற்று வட்டார கிராமங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் இந்த பூச்சொரிதல்
விழாவில் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். நள்ளிரவு ஒரு மணி வரை நகரின் பல்வேறு
பகுதிகளில் பூத்தட்டுகளை வைத்து ஆடலும் பாடலும், கரககாட்டம் உள்ளிட்டு பல்வேறு
கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பின்னர் பொதுமக்கள் காணிக்கையாக செலுத்திய பூக்களை கொண்டு இரவு முழுவதும்
அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்றது. இதையடுத்து, அதிகாலை சிறப்பு
பூஜைகள் நடைபெற்றது. இந்த பூச்சொரிதல் விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.







