திருச்சி மாவட்டம், முசிறி அருகே தேவானூர் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா (38). காணும் பொங்களை முன்னிட்டு நேற்று இவரது வீட்டின் அருகே விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுள்ளது. அப்போது இரவு வழுக்கு மரம் ஏறும் போட்டியில் இரு அணிகளுக்கு இடையே வாய்தகராறு ஏற்பட்டு தள்ளு முள்ளு நடந்துள்ளது.
இதனால் கார்த்திக்ராஜா இருதரப்பையும் சமாதானப்படுத்தி விளக்கியுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பை சேர்ந்த சக்திவேல் (28), தினேஷ்குமார்(19) ஆகிய இருவரும் கார்த்திக்ராஜாவிடம் தகராறு செய்து கத்தியால் மார்பில் குத்தியுள்ளார். இதில் கார்த்திக்ராஜா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் கார்த்திக்ராஜாவை மீது நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக்ராஜா இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முசிறி போலீஸ் டிஎஸ்பி சுரேஷ்குமார், தா.பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ், உதவி ஆய்வாளர் சஞ்சீவி மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் இருந்த சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவான சக்திவேல்(28), தினேஷ் குமார் (19) ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.







